சிங்கப்பூரில் ஒமிக்ரான் வகை கொரோனா தொற்றின் உருமாறிய KP.2 வகை அதிகம் பரவல் வரும் நிலையில் இந்தியாவில் இதனால் எவ்வித பயமோ, பதற்றமோ தேவையில்லை என்றும், இந்த வகை தொற்று இந்தியாவில் ஏற்கனவே பதிவாகியுள்ளது என்றும் பொது சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.
சிங்கப்பூரில் மே முதல் வாரத்தில் 26 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவிய நிலையில் ஒவ்வொரு நாளும் 200க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. இம்மாத இறுதிக்குள் சிங்கப்பூரில் கொரோனா பரவல் உச்சத்தை எட்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும் என்று சிங்கப்பூர் அரசு அறிவுறுத்தி உள்ளது.