போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தவிக்கும் கரூர் மாநகராட்சி கண்டுகொள்வரா ?

Webdunia
வியாழன், 3 மார்ச் 2022 (23:36 IST)
போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தவிக்கும் கரூர் மாநகராட்சி கண்டுகொள்வரா ? கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் – கரூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் என்ன தான் செய்கின்றார் ?
 
தமிழக அளவில் மைய மாவட்டம், தொழில்கள் நிறைந்த மாவட்டம், கொசுவலை, டெக்ஸ்டைல் ஆகிய தொழில்களில் முன்னோடி மாவட்டம் என்றெல்லாம் பெருமை வாய்ந்த கரூர், தற்போது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு அதற்கான தேர்தலும் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்ற மாமன்ற வார்டு உறுப்பினர்களுக்கும், பதவி ஏற்பினையும் நடத்தியுள்ளது என்றால் வரலாற்றிலேயே முதன்முறையாக இந்த சம்பவம் கரூரில் அரங்கேறியுள்ளது. இவ்வளவு பெருமை வாய்ந்த கரூர் நகராட்சியாக இருந்து மாநகராட்சியாக தேர்வு பெற்று அதற்கான தேர்தலையும் நடத்தி வெற்றி பெற்றவர்களும் பதவி ஏற்றநிலையில், இன்றும் அந்த பழைய ரோல் மாடல் தான் நடந்து வருகின்றது. டிராபிக் ஜாம் என்றால் அதில் முன்னணி நகரங்களில் முக்கியத்துவம் வாய்ந்தவை கரூர், அப்படி பட்ட கரூர் மாநகராட்சி திண்ணப்பா கார்னர் பகுதியில் மாலை நேரங்களில் செங்குந்தபுரத்திலிருந்து வரும் இருசக்கர வாகனங்களும், நான்குசக்கர வாகனங்களும் பழைய சேலம் பைபாஸ் சாலையில் இணைவதினால் அங்கு அதிகமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. இதனை கரூர்  போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் கண்டுகொள்ளாமல், மற்ற போக்குவரத்து போலீஸாரை ஆங்காங்கே வேலைகளில் அமரவைத்து வருகின்றார். தினந்தோறும் இதை கண்டும் காணாமல் வேலைப்பணியில் இருந்து வரும் கரூர் போக்குவரத்து ஆய்வாளர் மீது கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல், கவனம் செலுத்தாதது ஏனோ என்று தான் தெரியவில்லை என்கின்றனர் சமூக நல ஆர்வலர்களும், நடுநிலையாளர்கள்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்