நான் கோழை அல்ல ஒரு போராளி - முதல்வர் மம்தா பானர்ஜி

Webdunia
வியாழன், 3 மார்ச் 2022 (22:51 IST)
நான் கோழை அல்ல  ஒரு போராளி என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

உத்தபிரதேச மா நிலத்தில் 403 சட்டசபை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இதில், ஏற்கனவே   5 கட்ட வாக்குபதிவு முடிந்த  நிலையில், 111 தொகுதிகளுக்கு 2 கட்ட தேர்தல்    நடக்கவுள்ளது.

இந்த தேர்தலில் சமாஜ்வாடி  மற்றும் தன் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக மம்தா பானர்ஜி பிரசாரம் செய்து வருகிறார்.

இன்று  வாரணாசியில் அவர் பிரசாரத்தின்   போது கூறியதாவது:   ரவுடியிச சிந்தனை கொண்டுள்ள பாஜக தொண்டர்கள் என் வண்டியை நிறுத்தினர். எனது காரை கம்பியால் அடித்தபடி, திருபிப்போ எனக் கூறினர். இதற்கெல்லாம்  நான் பயப்படமாட்டேன்.                       நான் கோழையல்ல    நான் ஒரு போராளி எனக் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்