தொடர்ந்து பைக் ஓட்டுவேன்...சர்வதேச லைசென்ஸ் இருக்கு-டிடிஎஃப். வாசன்

Webdunia
வெள்ளி, 3 நவம்பர் 2023 (18:53 IST)
சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே பைக்கில் வாசன் சென்று கொண்டிருந்தபோது வீலிங் செய்ய முயன்றார். அப்போது அவரது பைக் விபத்துக்குள்ளாகி அவர் படுகாயம் அடைந்தார்.

இதனை அடுத்து ஆபத்தான முறையில் வாகனத்தை இயக்குதல் உள்ளிட்ட சில பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் அவர்  ஜாமீன் மனு தாக்கல் செய்த  நிலையில் அந்த மனுக்கள் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, நேற்று முன்தினம் அவருக்கு  நிபந்தனை ஜாமீன் வழங்கியது  உயர் நீதிமன்றம்.

இந்த நிலையில் இன்று புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார் டிடிஎஃப் வாசன். அவரது டிரைவிங் லைசென்ஸ் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்ட நிலையில் இதுகுறித்து அவரிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர்.

அப்போது அவர் கூறியதாவது:  ‘’பைக் ஓட்டுவதை நிறுத்த மாட்டேன். சிறைவாசிகள் எனக்கு உதவினர். அதிகாரிகள்  பண்பாக நடந்துகொண்டனர். பைக் தான் என்னுடைய லைஃஃப். லைசென்ஸ் ரத்தானதை கேட்டபோது வருத்தமா இருந்தது. என்னிடம் இன்டர்நேசனல் லைசென்ஸ் இருக்கிறது… ’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்