10ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது ? முதலமைச்சர் ஆலோசனை !

Webdunia
செவ்வாய், 26 மே 2020 (13:54 IST)
10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனை தொடங்கியது . ஏற்கனவே மருத்துவ நிபுணர் குழுவினருடனான ஆலோசனை நிறைவடைந்த நிலையில் பொதுத்தேர்வு குறித்து  அமைச்சர் செங்கோட்டையன், பள்ளி கல்வித்துறை அதிகாரிகளிடம்  எப்போது பள்ளிகளை திறப்பது என்பது குறித்து முதலமைச்சர் கருத்து கேட்டு வருவதாக தகவல்கள் வெளியாகிறது. அதேசமயம் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மருத்துவ குழுவினருடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகிறது.

கொரோனா காலத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் 4 ஆம்   கட்ட ஊரடங்கு வரும் மே 31 ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 10 வகுப்பு பொதுத்தேர்வு  கட்டாயம் நடக்கும் என தமிழக அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று,  10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனை தொடங்கியது . பள்ளிகளை எப்போது திறப்பது என்பது குறித்து முதலமைச்சர் கருத்து
கேட்டு வருகிறார். தேர்வு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் முதலமைச்சரிடம் விளக்கம் அளிக்கின்றனர் .

மேலும்  வெளியூர் மாணவர்களுக்கு இ-பாஸ் வழங்குவது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகிறது. 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்