2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு நாம் இப்போதே தயாராகிவிட்டோம்- முதல்வர் மு.க.ஸ்டாலின்

Webdunia
சனி, 5 ஆகஸ்ட் 2023 (15:31 IST)
''பாஜகவினருக்கு வரும்  2024  நாடாளுமன்றத் தேர்தல் வாழ்வா சாவா என்ற தேர்தல். அதனால், மீண்டும் ஆட்சியைப் பிடிக்க அவர்கள் எதையும் செய்வார்கள்'' என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
 
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில்  முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது: 

இந்த ஆண்டு கலைஞரின் நூற்றாண்டு விழாவினை வெறும் கொண்டாட்டமாக மட்டும் இல்லாமல் கொள்கை திருவிழாவாக கொண்டாட வேண்டும்.  பாஜகவினரை பொறுத்தவரை இது அவர்களுக்கு வாழ்வா சாவா என்ற தேர்தல்.அதனால், மீண்டும் ஆட்சியைப் பிடிக்க அவர்கள் எதையும் செய்வார்கள்.

பாஜகவினர் தமிழ் நாட்டில் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைவதால் நம்மை நோக்கிப் பாய்வார்கள்… கடந்த காலங்களில் நாம் இதுபோன்ற பல தடைகளை சமாளித்து வெற்றி பெற்றோம். இந்த முறையும் அதேபோல் நாம் முழு வெற்றிபெற ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்