தமிழகக பாஜக தலைவர் அண்ணாமலை, நான் அரசியல் விஞ்ஞானிக்கு எல்லாம் பதில் சொல்ல மாட்டேன் என்று அறிக்கை வெளியிட்டதற்கு, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதில் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இதுகுறித்து தமிழக பாஜக துணைத்தலைவர் கரு. நாகராஜன், செல்லூர் ராஜூ'', இவ்வளவு நாட்கள் எப்படி அமைச்சராக இருந்தார் என்பது விநோதமாக உள்ளது. செல்லூர் ராஜூ இதுபோன்ற பேச்சுகளை இனிமேல் நிறுத்திக் கொள்ள வேண்டும். அண்ணாமலை கத்துக்குட்டியா? செல்லூர் ராஜூ கத்துக்குட்டியா ? என்பது மக்களுக்குத் தெரியும் ''என்று கூறியுள்ளார்.