நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு திட்டவட்டம்

Webdunia
வியாழன், 17 பிப்ரவரி 2022 (14:00 IST)
நியூட்ரினோ  திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் கூறியதாவது:
 
தேனியில் நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்க முடியாது. மேற்குத்தொடர்ச்சி மலையின் பாதுகாப்பே முக்கியம். மதிகெட்டான் - பெரியார் புலிகள் வலசையில் திட்ட அமைவிடம் இருப்பதால் அனுமதிக்க முடியாது
 
புலிகள் சரணாலயத்தை கம்பம் பள்ளத்தாக்குடன் இணைக்கும் முக்கிய இணைப்பாக போடி மலை விளங்குகிறது. மலையில் மிகச்சிறிய அளவில் மனித செயல்பாடுகளால் அதிர்வுகள் ஏற்பட்டால் கூட புலிகள் நடமாட்டம் பாதிக்கும்.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்