பாஜகவிற்கு ஓட்டு போடாவிட்டால் பாவம் வரும்ன்னு திருவள்ளுவர் சொல்ல்யிருக்கார்: ஹெச்.ராஜா

Webdunia
வியாழன், 17 பிப்ரவரி 2022 (13:50 IST)
பாஜகவிற்கு ஓட்டு போடவில்லை என்று என்றால் சாபம் வரும் என திருவள்ளுவர் சொல்ல்யிருக்கார் என பாஜக பிரமுகர் ஹெச் ராஜா பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இந்துக்களுக்கு எதிராக திமுக அரசு செயல்பட்டு வருகிறது என்றும் திமுக அரசின் நிர்வாகம் முழுவதுமே மதமாற்றம் செய்பவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் குற்றம் சாட்டினார் 
 
மேலும் 1967ல் இருந்து  தமிழகத்தில் தீயசக்திகள் இந்துக்களுக்கு எதிராக மட்டுமே செயல்பட்டு வருகிறது என்றும் சர்ச்சுகள் மசூதிகள் ஆகியவை நீர் நிலைகள் இருந்தாலும் அகற்றாமல் இருக்கும் திமுக அரசு கோவில்களை மட்டும் அகற்றி வருகிறது என்றும் கூறினார் 
 
மேலும் இனிமேல் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறினால் திமுக அரசை மனநலம் குன்றிய அரசு என்று கூறுவோம் என்றும் எச் ராஜா பதிலடி கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
மேலும் தாமரைக்கு வாக்களிக்காமல் வேறு யாருக்காவது வாக்களித்தீர்கள் என்றால் மகா பாவம் என நான் சொல்லவில்லை திருவள்ளுவர் சொல்லி உள்ளார் என, 'எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு' என திருக்குறளை சொல்லி ஹெச் ராஜா தனது உரையை முடித்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்