தமிழகத்தில் தண்ணீர் வறட்சி ! திருட்டை தடுக்க பூட்டு ...பரபரப்பு தகவல்

Webdunia
வெள்ளி, 14 ஜூன் 2019 (15:00 IST)
தமிழகத்தில் என்றும் இல்லாத அளவுக்குக் கடுமையான பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. அணைகளில் போதுமான நீர் இல்லாதது, ஏரி,குளம்,குட்டை போன்ற நீர்நிலைகளை முறையாகப் பராமரிக்காததுமே இந்த நிலைமைக்கு நம்மை தள்ளிவிட்டுள்ளது.
தற்போது சென்னையில் தண்ணீர் பஞ்சம் உச்சத்தை அடைந்து வருகிறது. தண்ணீர் தட்டுப்பாட்டால் சமைக்க வழியில்லாமல் பலர் உணவகங்களையே இழுத்து மூடிவிட்டார்கள்.
 
தமிழ்நாடு முழுக்கவே முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த் முறை தண்ணீர் பஞ்சம் மக்களை வாட்டி வதைக்கிறது. முக்கியமாக தலைநகர் சென்னையில் குடிதண்ணீருக்காக தினம்தோறும் பெரும் யுத்தமே நடக்கிறது.
 
மத்திய வர்க்க குடும்பங்கள் தனியார் டேங்கர் லாரிகளை நம்பியிருக்க கடைசியாக அவர்களுக்கும் தண்ணீர் கிடைக்காமல் காலி குடங்களோடு ரோட்டுக்கு வந்து விட்டார்கள். மக்கள் தினம்தோறும் காலி குடங்களோடு வீதி வீதியாக அலைந்து கொண்டுதான் இருக்கிறார்கள். தண்ணீர்தான் கிடைக்க வழியில்லை.
 
இந்த தண்ணீர் பிரச்சினை குடும்பங்களை மட்டுமல்ல பெரிய வணிக நிறுவனங்களையும், பள்ளிகளையும் கூட பாதித்துள்ளது. பல தனியார் பள்ளிகள் மாணவர்களின் பெற்றோரிடம் “தங்கள் குழந்தைக்கு மறக்காமல் குடிநீர் கொடுத்து அனுப்புங்கள்” என அறிவுறுத்தி வருகின்றனர். சமீபத்தில் பிரபல ஐடி நிறுவனம் ஒன்றில் தண்ணீர் பற்றாக்குறையால் கழிவறையையே இழுத்து மூடிவிட்டார்கள். மேலும் சில நிறுவனங்கள் தண்ணீர் பிரச்சினையால் தங்களது பணியாளர்களை வீட்டிலிருந்தே பணியாற்றும்படி அறிவுறுத்தி வருகின்றன.
 
இந்த நிலைமை சென்னை மற்றும் அதன் புறநகர்களில் மட்டுமல்ல மாறாக தமிழ்நாடு முழுவதுமே இந்த நிலைமைதான்.
 
இந்நிலையில் தங்கள் பகுதிகளில் கிடைக்கும் தண்ணீரைப் பாதுகாக்க தண்ணீர் திருட்டை தடுக்கும் பொருட்டு தேனி மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள குழாய்களுக்கு பூட்டுப்போட்டு உள்ளனர்.
மேலும் தாங்கள் தேவைக்குப் போதுமானதாக விலைகொடுத்து வாங்கும் தண்ணீரை பத்திரப்படுத்துவதற்க்காகவே குழாய்களுகுப் பூட்டுப்போட்டு பத்திரப்படுத்தி வைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்