தமிழகத்தில் இன்றும் நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம்!

Webdunia
சனி, 21 நவம்பர் 2020 (10:29 IST)
அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த மாதம் வெளியிடப்பட்டது.

தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் அதிமுக அரசு அடுத்த ஆண்டு மே மாதத்தோடு முடிய உள்ளது. இதையடுத்து தேர்தல் நடக்க உள்ள நிலையில் புதிய வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இதற்கான இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 15 ஆம் தேதி வெளியாகும் என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா? பெயர் நீக்கம் மற்று திருத்தம் ஆகியவற்றை மேற்கொள்ள இன்றும் நாளையும் தமிழகம் முழுவதும் வாக்காளர் சிறப்பு முகாம் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்