இனிமே அரசியல்தான் : அதிரடி காட்டும் விஜயகாந்த் மகன்

Webdunia
ஞாயிறு, 7 அக்டோபர் 2018 (11:05 IST)
இனிமேல் அரசியலில் தீவிரமாக ஈடுபடப்போவதாக விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகர்  தெரிவித்துள்ளார்.

 
விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் அரசியலுக்கு வரப்போவதாகவும், அவருக்கு இளைஞர் அணி பொறுப்பு கொடுக்கப்பட இருப்பதாகவும் சமீபத்தில் செய்திகள் கசிந்தது. தற்போது அது உண்மை என்பது தெரிய வந்துள்ளது.
 
சென்னை பல்லாவரம் அடுத்துள்ள தேமுதிகவின் 14வது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட விஜய பிரபாகர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் “அரசியலில் தொடர்ந்து ஈடுபட முடிவெடுத்துள்ளேன். பொறுப்பை தேடி செல்லக்கூடாது. நான் நிறைய திட்டங்களை வைத்துள்ளேன். எனது தந்தை சென்ற வழியில்தான் நானும் செல்வேன். இளைஞர்கள் அனைவரும் என்னுடன் இணைந்து பணியாற்றினால் மாற்றத்தை கொண்டு வர முடியும்” என அவர் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்