அரசியல் களத்தில் விஜய்காந்தின் மூத்த மகன்: புத்துயிர் பெறுமா தேமுதிக?

சனி, 6 அக்டோபர் 2018 (16:15 IST)
தேமுதிக கட்சி துவங்கப்பட்டு 14 வருடங்கள் ஆகியுள்ளது. விஜய்காந்திற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் தீவிர அரசியலில் ஈடுபடமால் இருக்கிறார். விஜய்காந்த் இவ்வாறு இருப்பதே அவரது ரசிகர்களுக்கும் தொண்டர்களும் பெரும் வருத்தமாக உள்ளது. 

 
நடிகர் விஜயகாந்த், கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இரு பெறும் தலைவர்கள் அரசியலில் ஆளூமையோடு இருந்த பொழுதே கட்சியை துவங்கியவர். கட்சி துவங்கிய சில நாட்களிலேயே அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர். 
 
ஆனால், கூட்டணிக்குள் ஏற்படட் குழப்பம் தேமுதிகாவின் வளர்ச்சியை அப்படியே சாய்த்தது. பிரச்சனையை சரிக்கட்டி கட்சியை தூக்கி நிறுத்தலாம் என்று நினைத்தால் விஜயகாந்திற்கு உடல்நிலை ஒத்துழைக்கவில்லை.
 
இந்நிலையில், தேமுதிகவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்லவும், இருக்கும் தொண்டர்களை வழி நடத்தவும் விஜயகாந்தின் மூத்த மகன் அரசியலில் களமிறங்க உள்ளதாக தெரிகிறது. விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கு இளைஞரணி பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்