5 ஆண்டுகளில் 27 கோடி சொத்து சேர்ப்பு; விஜயபாஸ்கர் விவகாரம்! – முதல் தகவல் அறிக்கை!

Webdunia
திங்கள், 18 அக்டோபர் 2021 (09:08 IST)
அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயாபாஸ்கர் கடந்த 5 ஆண்டுகளில் 27 கோடிக்கு சொத்துகள் வாங்கியுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையில் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் தமிழகத்தின் சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் விஜயபாஸ்கர். இவர் வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக வருமானவரித்துறையினர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான பல இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். மனைவி மற்றும் பிள்ளைகள் பேரிலும் அதிக சொத்து வாங்கியதாக அவரது மனைவி மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

கடைசி சட்டமன்ற தேர்தலில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்த விஜயபாஸ்கர் தனது சொத்து மதிப்பு 6 கோடியே 41 லட்சம் என குறிப்பிட்டுள்ளார். ஆனால் 2016 முதல் மார்ச் 2021 வரையில் அமைச்சராக பதவி வகித்த காலத்தில், வருமானத்திற்கு அதிகமாக 27.22 கோடி மதிப்பில் சொத்துக்கள் வாங்கப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்கலில் ரெய்டு நடந்த நிலையில் தற்போது விஜயபாஸ்கரும் ரெய்டுக்கு உள்ளாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்