இந்நிலையில் சமீபத்தில் ஆவின் பால் விற்பனையில் முன்னேற்றத்திற்கு பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். அதில் “தீபாவளியையொட்டி ஆவினில் 50 டன் இனிப்பு வகைகளை தயாரித்து விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆவினில் இருந்து இனிப்பு வகைகளை ஊழியர்கள் யாரும் யாருக்கும் அன்பளிப்பாக வழங்க கூடாது. ஆவின் பாலை அதிக விலைக்கு விற்றால் என்னிடமோ அல்லது ஆவின் புகார் எண்ணிலோ தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் “ஆவினில் நாட்டு மாட்டுப்பாலும் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றை தனியாக வாங்கி பேக்கிங் செய்து விற்பனைக்கு கொண்டு வர வேண்டும் என்பதால் வழக்கமான பால் பாக்கெட்டுகளை விட விலை சற்று கூடுதலாக இருக்கும், அதேபோல ஆட்டுபாலையும் விற்பனைக்கு கொண்டுவர ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளார்.