ட்விட்டரில் டிரெண்ட் ஆகும் #VendumMeendumModi.. நெட்டிசன்கள் சொல்லும் காரணங்கள்..

Siva
செவ்வாய், 27 பிப்ரவரி 2024 (07:32 IST)
தமிழகத்தை பொருத்தவரை கடந்த சில ஆண்டுகளாக மோடி எதிர்ப்பு மற்றும் பாஜக எதிர்ப்பு கொள்கையில் தமிழக மக்கள் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அண்ணாமலை பாஜக தமிழர் தலைவராக பதவியேற்ற பின்னர் பாஜக ஆதரவு நிலைப்பாட்டை மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வருவதாகவும் மோடி மீண்டும் ஆக வேண்டும் என்று பலர் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மீண்டும் பாஜக வெற்றி பெறும் என்றும் மூன்றாவது முறையாக மோடி பிரதமர் நாற்காலியில் அமர்வார் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் திடீரென ’மீண்டும் வேண்டும் மோடி’ என்ற ஹேஷ்டேக் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் இல்லை, பொன்முடி பதவி போயாச்சு, பெரியசாமி விடுதலை ரத்து, விஜயதாரணி பாஜகவில் சேர்ந்தது ஆகியவற்றையெல்லாம் வைத்து பார்க்கும்போது பாஜக தமிழகத்தில் வளர்ந்து உள்ளதாகவும் எனவே மீண்டும் மோடி வேண்டும் என்று நெட்டிசன்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

அது மட்டும் இன்றி கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் வெறும் 3% வாக்குகள் மட்டுமே பாஜக பெற்று இருந்த நிலையில் தற்போது வெளிவந்துக்கும் கருத்துக்கணிப்பை பார்க்கும்போது 18 முதல் 20 சதவீத வாக்குகளை பாஜக பெரும் என்றும் கூறப்படுவதால் பாஜகவினர் உற்சாகத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்