திமுக-காங்கிரஸ் பேச்சுவார்த்தையில் இழுபறி.. திடீரென டெல்லி பறந்த செல்வப்பெருந்தகை..!

Siva
செவ்வாய், 27 பிப்ரவரி 2024 (07:26 IST)
திமுக காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே தொகுதி உடன்பாட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை திடீரென டெல்லி சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம் பெற்றுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு இந்த முறை ஐந்து தொகுதிகள் மட்டுமே தர முடியும் என்று திமுக தரப்பில் கூறப்பட்டு இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி தலைவராக அழகிரி இருந்தபோதே ஆறு தொகுதிகள் என திமுக தரப்பில் கூறப்பட்ட நிலையில் தற்போது செல்வப்பெருந்தகை தலைவரான பின்னர் ஐந்து தொகுதிகள் என கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அழகிரியை விட தான அதிகமாக ஒரு தொகுதியாக வாங்கி தந்தால் தான் தனக்கு கட்சியினர் மத்தியில் மரியாதை இருக்கும்  என்று நினைக்கும் செல்வப் பெருந்தகை திடீரென டெல்லி சென்று இருப்பதாகவும் தேசிய தலைவர் கார்கேயிடம்  பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து காகே நேரடியாக திமுக தலைமையிடம் பேச்சுவார்த்தை நடத்த போவதாகவும் குறைந்தபட்சம் ஏழு தொகுதிகள் வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுக்க போவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் ஐந்து தொகுதிகளே அதிகம் என்று திமுக தரப்பினர் கூறிவரும் நிலையில் சுமூகமாக இந்த பிரச்சனை தீருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்