ஜெயலலிதாவை என்ன பாடுபடுத்தியிருப்பார்கள்? சீறிய வளர்மதி

Webdunia
செவ்வாய், 12 செப்டம்பர் 2017 (12:25 IST)
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், ஆட்சியை கலைப்போம் என்பவர்கள் ஜெயலலிதாவை என்ன பாடுபடுத்தியிருப்பார்கள் என பா.வளர்மதி ஆவேசமாக பேசியுள்ளார்.


 

 
சென்னையில் இன்று அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் 95% அதிமுக நிர்வாகிகள் கலந்துக்கொண்டுள்ளனர். பொதுக்குழு கூட்டத்தின் வரவேற்புரை ஆற்றிய பா.வளர்மதி ஆவேசமாக பேசினார். அவர் கூறியதாவது:-
 
ஜெயலலிதாவின் ஆட்சியை விரட்டுவோம் என மிரட்டுபவர்கள் ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர்கள். ஆட்சியை கலைப்போம் என்பவர்கள், ஜெயலலிதாவை என்ன பாடுபடுத்தியிருப்பார்கள். எடப்பாடி பழனிச்சாமி உள்ளிருப்பு போராட்டம் நடத்தி அதிமுகவை காப்பாற்றி ஜெயலலிதா வழியில் ஆட்சியை நடத்தி வருகிறார் என்றார்.
 
அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுவது நேற்று உறுதியானதை தொடர்ந்து டிடிவி தினகரன் ஆட்சியை கலைக்க தயங்கமாட்டோம் என பேட்டியளித்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பா.வளர்மதி பேசியது அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்