முதல்வர் முக ஸ்டாலினை சந்தித்த வைரமுத்து: காரணம் என்ன?
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை இன்று சந்தித்ததாக கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தனது டுவிட்டரில் பதிவு செய்து உள்ளார். மேலும் அவர் முதல்வருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் சமீபத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக வரலாறு காணாத வகையில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து திமுக தலைவரும் முதல்வருமான முக ஸ்டாலின் அவர்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் இன்று முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: