காவிரி தண்ணீர் கடலில்தான் கலக்கப் போகிறது – வைகோ ஆதங்கம்

Webdunia
திங்கள், 12 ஆகஸ்ட் 2019 (18:53 IST)
சென்ற வருடம் முக்கொம்பில் உடைந்த அணையை சரி செய்யாததால் தற்போது காவிரிக்கு வரும் நீர் வீணாக கடலில்தான் கலக்க போகிறது என வைகோ தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

2018ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் திருச்சி அருகே உள்ள முக்கொம்பு அணையில் உடைப்பு ஏற்பட்டது. அந்த அணை 1836ல் வெள்ளையர் காலத்தில் கட்டப்பட்டது என்பதால் புதிய அணை ஒன்றை கட்ட தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. ஆனால் அந்த பணிகள் இன்னும் முழுமையாக முழுமை அடையவில்லை. காவிரியிலிருந்து கொள்ளிடத்திற்கு தண்ணீர் பிரித்துவிடும் முக்கியமான அணை அது என்பதால், தற்போது முழு தண்ணீரும் காவிரியிலேயே பாய வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

இதை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள வைகோ ”தமிழக அரசின் மெத்தன போக்கால் காவிரியில் வரும் தண்ணீர் வீணாக கடலில் சென்று கலக்கப் போகிறது. கடந்த ஓராண்டு காலமாக அணைக்கட்டும் பணிகளை துரிதமாக செய்யாமல் மெத்தனம் காட்டிய அரசுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

மேலும் காவிரி நீரை வீணாக கடலில் சென்று கலக்கமால் விவசாயத்திற்கு உதவும் வகையில் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்