கொரோனா சூழலைப் பயன்படுத்தி ஸ்டெர்லைட் திறக்க முயற்சி – வைகோ கண்டனம்!

Webdunia
வியாழன், 22 ஏப்ரல் 2021 (13:51 IST)
கொரோனா இரண்டாவது அலை மிகவேகமாக பரவி வருவதால் மருத்துவ ஆக்ஸிஜன் போதுமான அளவுக்குக் கையிருப்பு இல்லை என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தூத்துக்குடியில் மூடப்பட்ட வேதாந்தாவின் ஸ்டெர்லைட் நிறுவனம் தங்கள் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து தருவதாகவும், அதற்காக ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தது. ஆனால் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இப்போது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ‘ஆக்சிஜன் தருகிறேன் என்ற பெயரில், ஸ்டெர்லைட் நச்சு ஆலையை இயக்க முயற்சிக்கிறார்கள். ஸ்டெர்லைட் ஆலையின் முயற்சிக்கு தமிழக அரசு அனுமதி தரக்கூடாது.' எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்