வடிவேலு பட பாணியில் பணம் திருடிய கும்பல்...

Webdunia
வியாழன், 23 ஜூலை 2020 (18:08 IST)
சென்னையில் உள்ள தரமணியில் சந்திரன் என்பவர்   அரிசிக் கடை நடத்தி வந்தார். இதில் நடிகர் வடிவேலு பட பாணியில் ரூ.75 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருப்பசாமி குத்தகைக்காரர் படத்தில் நடிகர் வடிவேல் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஒரு அரிசிக்கடையில் திருடுவார். இந்தக் காட்சியைப் போல் தற்போது ஒரு சென்னையில் நடைபெற்றுள்ளது.

சென்னை தரமணில் சந்திரன் என்பவர் அரிசிக் கடை நடத்தி வந்தார். இந்நிலையில் இருவர் மூன்று மூட்டை அரிசி வாங்க வந்துள்ளதாகக் கூறிவிடு அங்கிருந்த ரூ.17 ஆயிரம் பணத்தை இருவரும் திருடிக்கொண்டு, தற்போது அரிசிக்கு பணம் இல்லை என்றும் திரும்ப வந்து தருகிறோம் என்று கூறிவிட்டுச் சென்றனர்.

பின்னர்  அரிசிக் கடை உரிமையாளர் தனது கள்ளாப்பேட்டியில் வைத்திருந்த  75 ஆயிரம் பணம் திருடுப் போனதை அறிந்த அவர் போலீஸில் புகார் தெரிவித்தார். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்