தடுப்பூசி போட்டால் ஆண்ட்ராய்ட் மொபைல் இலவசம்!

Webdunia
சனி, 18 செப்டம்பர் 2021 (15:01 IST)
தடுப்பூசி போட்டுக்கொண்டால் ஆண்ட்ராய்ட் மொபைல் போன் இலச்வாவசாக வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குக் கொரொனா வைரஸ் பரவியது. தற்போது கொரொனா 2 வது அலை பரவி வருகிறது. விரைவில் கொரொனா 3 அலை பரவும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவில் 18 வயதிற்கு மேலுள்ளவர்களுக்கு அரசு இலவசமாகவே கொரொனா தடுப்பூசி வழங்கி வருவதால் அனைவரும் தடுப்பூசி  செலுத்திக் கொள்ள வேண்டுமென அரசு விழிப்புணர்வூட்டி வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் அபாயகரமான கொரொனாவகை இந்தியாவில் இல்லை எனத் தேசிய நோய்க் கடுப்பாட்டு இயக்குநர் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
திருவள்ளூர் நகராட்சியில் நாளை கொரோனா தடுப்பூசில் முகாம் நடைபெறும் எனவும், தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு குலுக்கல் முறையில் ரூ.10,000 மதிப்பிலான ஆண்ட்ராய்ட் செல்போன் பரிசாக வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்