பாகிஸ்தானில் உள்ள அணு உலை அருகே இந்தியா தாக்குதல் நடத்தியதால் பெருத்த சேதம் ஏற்பட்டிருக்கிறது என்றும், பாகிஸ்தானில் உள்ள பல ராணுவத் தளவாடங்கள் இந்தியாவால் தாக்கப்பட்டன என்றும் அந்தப் பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது.
ஆனால் அதே நேரத்தில், இந்தியாவின் ரபேல் உள்ளிட்ட சில ஏவுகணைகளை பாகிஸ்தான் தாக்கியதாக கூறியது அனைத்தும் ஆதாரமற்றவை என்றும், இந்தியாவுக்கு எந்தப் பெரிய சேதமும் இந்த மோதலில் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
இதனால், பாகிஸ்தான் பிரதமர் உள்பட பாகிஸ்தான் ராணுவம் அதிகாரிகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவிய, இந்தியாவுக்குச் சேதம் என்ற செய்திகள் அனைத்தும் பொய் என்பது நிறுவப்பட்டுள்ளது.