மதுரை முடிதிருத்தும் தொழிலாளி மகளுக்கு ஐநா சபை கெளரவம்!

Webdunia
வெள்ளி, 5 ஜூன் 2020 (11:13 IST)
மதுரை முடிதிருத்தும் தொழிலாளி மகளுக்கு ஐநா சபை கெளரவம்!
கொரோனா வைரஸ் நோயால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் காரணமாக கோடிக்கணக்கான ஏழை எளிய மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் மதுரையை சேர்ந்த சலூன் கடைக்காரரான மோகன் என்பவர் தனது மகளின் எதிர்கால கல்வி செலவிற்காக சேமித்து வைத்து இருந்த ரூ. 5 லட்சத்தில் தனது பகுதியில் இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு அரிசி உள்பட அத்தியாவசிய பொருட்களை வாங்கி கொடுத்தார். இதற்கு அவரது மகளும் ஒப்புக்கொண்டார். முடிதிருத்தும் தொழிலாளி மோகனின் இந்த செயலை பாராட்டி சமீபத்தில் மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு பாராட்டு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் பிரதமர் மோடியால் பாராட்டப்பட்ட மதுரை முடிதிருத்தும் தொழிலாளி மோகனின் மகள் நேத்ரா என்பவரை ஏழைகளுக்கான நல்லெண்ண தூதராக ஐ.நா சபை வளர்ச்சி மற்றும் அமைதிக்கான பிரிவு அறிவித்து கெளரவப்படுத்தியுள்ளது. இதற்கான சான்றிதழையும் ஐநா சபை அனுப்பி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அதுமட்டுமின்றி இந்த பணிக்கான ஊக்கத் தொகையாக ஒரு லட்சம் ரூபாயும் முடிதிருத்தும் தொழிலாளி மோகன் நேத்ராவுக்கு ஐநா வழங்கியுள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது. ஐநா சபை பதவி பெற்ற மோகன் மகளை அனைவரும் வாழ்த்தி வருகின்றனர்.
 
ஏற்கனவே நேற்று தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அவர்களும், முடிதிருத்தும் தொழிலாளி மோகனின் குடும்பத்தை நேரில் அழைத்து பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசு வழங்கினார் என்பதும், மதுரையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் மோகனின் மகள் கல்விச்செலவுக்காக ரூ.50 ஆயிரம் வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்