உதயநிதி ஸ்டாலினை நிற்கவைத்து நேர்காணல் செய்த திமுகவினர்!

Webdunia
சனி, 6 மார்ச் 2021 (14:54 IST)
திமுக வேட்பாளர் நேர்காணல் இன்றோடு முடிவடைய உள்ள நிலையில் அந்த கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேர்காணலில் கலந்துகொண்டார்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம்தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 2 ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் தமிழக அரசியல்களம் சூடுபிடித்துள்ளது.திராவிட கட்சிகள் மற்ற கட்சிகளுடன் கூட்டணி குறித்தும் தொகுதிப் பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தேர்தல் கால நடைமுறைகள் சமீபத்தில் அமலுக்கு வந்த நிலையில், தமிழக தேர்தல் களம்.

திமுக விருப்பமனு அளித்தவர்களிடம் எல்லாம் நேர்காணல் செய்து வருகிறது. இந்நிலையில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஆகியோரிடம் நேர்காணல் செய்யப்பட்டனர். உதயநிதி ஸ்டாலினை நேர்காணல் செய்தபோது உதயநிதி நின்ற படியேக் கேள்விகளுக்கு பதிலளித்தார். முந்தைய தினங்களில் கட்சியின் முக்கியப் பிரமுகர்களுக்கு மட்டிம் நாற்காலி போடப்பட்டதாகவும், மற்றவர்களை நிற்க வைத்தே நேர்காணல் செய்ததாகவும் விமர்சனம் எழுந்ததது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்