கைதாக கைதாகத்தான் பிரச்சாரம் சூடு பிடிக்கும்: உதயநிதி ஸ்டாலின்

Webdunia
ஞாயிறு, 10 ஜனவரி 2021 (17:07 IST)
கைது செய்ய கைது செய்ய தான் பிரச்சாரம் சூடு கொடுக்கும். எனவே கைது செய்வதற்காக தயங்க வேண்டாம் என திமுக தலைவர் தன்னிடம் கூறியதாக உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார் 
 
இன்று சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற திமுக விழாவில் கலந்துகொண்ட உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்துக்கு செல்லும் இடமெல்லாம் அவதூறு வழக்குகளை தாம் எதிர் கொண்டு வருவதாக கூறினார்
 
தினமும் காலையில் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் உட்கார வைத்து விடுவார்கள். அதனால் என்னால் பிரச்சாரம் செய்ய முடியவில்லை, என்ன செய்யலாம்? சென்னைக்கு வந்து விடவா? என்று தலைவரிடம் கேட்பேன் 
 
ஆனால் தலைவர் நீ சென்னைக்கு வரவே கூடாது, எவ்வளவு நாள் கைது செய்தாலும் பரவாயில்லை என்று கூறுவார். உடனே நான் எனது வழக்கறிஞரிடம் கைது செய்து கொண்டே இருப்பதால் என்னால் பிரச்சாரம் செய்ய முடியவில்லையே என்ன செய்யலாம்? என்று கேட்பேன் அப்போது அவர்கள் கைதாக கைதாகத்தான் பிரச்சாரம் சூடு பிடிக்கிறது என்று கூறுவார்கள் 
 
தற்போது கூட என் மீது ஒரு அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் நான் பெண்களை தவறாக கூறவே இல்லை அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருந்தது. அதற்காக நான் மன்னிப்பு கேட்க முடியாது. ஒருவேளை என்னுடைய கருத்தால் யாரேனும் மனம் புண்பட்டிருந்தால் வருத்தப்படுகிறேன் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்