லஞ்சம் வாங்கும்போது மின்வாரிய போர்மேன் கைது

வெள்ளி, 8 ஜனவரி 2021 (22:55 IST)
கரூரில் பட்டா நிலத்தின் மீது மின்சார கம்பிகள் செல்வதை மாற்றியமைக்க ரூ.3,500 ரூபாய் லஞ்சம் வாங்கும்போது மின்வாரிய போர்மேன் கைது            
 

கரூர் மாவட்டம் காதப்பாறை சேர்ந்தவர் செந்தில்குமார் இவருடைய பட்டா நிலத்தின் மீது மின்கம்பிகள் செல்வதை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும் என்று மண்மங்கலம் மின்வாரிய அலுவலகத்தை அணுகினார் அங்கு பணியில் இருந்த போர் மேன் குணசேகரன் 53 என்பவர் செந்தில்குமார் பட்டா நிலத்தின் மீது செல்லும் மின் கம்பிகளை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டுமானால் ரூபாய் 3500 லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத செந்தில்குமார் கரூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். புகார் தொடர்ந்து கரூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரசன்ன வெங்கடேஷ் ஆலோசனையின் பேரில் செந்தில்குமார் இன்று மின்வாரிய அலுவலகத்தில் ரசாயன பவுடர் தடவிய 3500 ரூபாயை குணசேகரனிடம் கொடுத்தார்.       

அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரசன்ன வெங்கடேஷ் மற்றும் போலீசார் குணசேகரனை கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் லஞ்சப் பணம் 3500யை பறிமுதல் செய்து உள்ளனர்
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்