நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அவர்கள் வாரத்தின் ஐந்து நாட்கள் தேர்தல் பிரச்சாரமும் ஒரு நாள் மட்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியும் ஒரு நாள் ஓய்வு எடுத்தும் வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் வாரம் முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
புதிய வருடத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த சீரமைப்பும் தமிழகத்தை என்கிற பிரகடத்துடன் கமல்ஹாசன் அவர்கள் தமது நான்காம் கட்ட சுற்றுப்பயணத்தை பெரும் மக்கள் எழுச்சியுடன் சந்தித்து, தனது ஐந்தாம் கட்ட பிரச்சாரத்திற்கு கோவை மண்டலத்தில் துவங்க இருக்கிறார்
வருகிற ஜனவரி 10, 11, 12, 13 ஆகிய தேதிகளில் கோவை மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து மண்டல செயலாளர்களும், மாநில மற்றும் மாவட்ட செயலாளர்களும், சார்பு அணி கலைசார்ந்த செயலாளர்களும் மற்றும் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் பணியாற்றியும் தலைவர் அவர்களின் வருகையை வெகு விமர்சையாக கொண்டாடி வரவேற்று பயணத்தை வெற்றி நிகழ்வாக மாற்றவேண்டும்