கொரோனா தடுப்பு நடவடிக்கை: அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தது குறித்து உதயநிதி டுவிட்

Webdunia
திங்கள், 3 மே 2021 (19:49 IST)
தமிழகத்தின் அடுத்த ஆட்சியை திமுக ஆட்சி என்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது அரசு அதிகாரிகளுடன் முதல்வராக பதவி ஏற்க இருக்கும் முக ஸ்டாலின் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்தார் என்ற தகவல் ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் முக ஸ்டாலின் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை செய்ததாக உதயநிதி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முக ஸ்டாலினின் டுவிட்டை அவர் ரீடுவிட் செய்துள்ள நிலையில் அந்த டுவிட்டில் கூறியதாவது 
 
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. தடுப்பு நடவடிக்கைகள் முழு முனைப்புடன் நடைபெற்ற வலியுறுத்தினேன். மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளி கடைப்பிடித்து அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நோய் பரவலை தடுத்திட உதவி வேண்டும் என்று அந்த டுவிட்டில் முக ஸ்டாலின் குறிப்பிட்டு உள்ளார். இதுகுறித்த புகைப்படங்களும் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்