உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவியா? எந்த துறை தெரியுமா?

திங்கள், 3 மே 2021 (18:20 IST)
தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதை அடுத்து அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் இன்னும் ஒரு சில நாட்களில் முதல்வராக பதவியேற்க உள்ளார் 
 
இந்த நிலையில் ஸ்டாலினின் அமைச்சரவையில் யார் யார் அமைச்சர் பொறுப்பு ஏற்பார்கள் என்பது குறித்த தகவல் கசிந்துள்ளது
 
குறிப்பாக உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி உண்டு என்றும் அவருக்கு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வழங்கப்படும் என்றும் தகவல்கள் கூறுகின்றன 
 
அதேபோல் இந்த முறை இளைஞர்கள் சிலருக்கும் அமைச்சர் பதவி உண்டு என்றும் குறிப்பாக டிஆர்பி ராஜா, அன்பில் மகேஷ், வெற்றி அன்பழகன், டாக்டர் எழிலன் ஆகியோருக்கும் அமைச்சர் பதவி உண்டு என்றும் கூறப்படுகிறது 
 
மேலும் மாற்று கட்சியிலிருந்து திமுகவுக்கு வந்த செந்தில் பாலாஜி, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகியோருக்கும் அமைச்சர் பதவி கிடைக்கும் என்றும் திமுக வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்