மாண்டஸ் புயல் எதிரொலி.. பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

Webdunia
வியாழன், 8 டிசம்பர் 2022 (08:03 IST)
தென்கிழக்கு வங்க கடலில் தோன்றியுள்ள மாண்டஸ் புயல் தற்போது கரையை நெருங்கி வரும் நிலையில் இன்று ஒரு சில மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த நிலையில் தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர் 
 
மேலும் நாளை புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்ப்பதால் சென்னை உள்பட பல பகுதிகளில் கனமழை பெய்யும் என்பதால் நாளை கிட்டத்தட்ட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்