சென்னை ரிச்சி தெருவில் உள்ள 90 கடைகளுக்கு சீல்.. மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி

Webdunia
வியாழன், 8 டிசம்பர் 2022 (08:01 IST)
சென்னை அண்ணாசாலை ரிச்சி தெருவில் உள்ள 90 கடைகளுக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் திடீரென சீல் வைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னை அண்ணா சாலையில் உள்ள ரிச்சி தெருவில் உள்ள 90 கடைகளுக்கும் பாரிமுனை சாலையில் உள்ள 30 கடைகளுக்கும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்
 
நீண்டகாலமாக தொழில் வரி செலுத்தாத காரணத்தினால் இந்த சீல் வைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொழில் வரி செலுத்தாமல் தொழில் உரிமம் பெறாமல் கடைகளை நடத்தி வந்த காரணத்தினால் சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் 1919 பிரிவின்படி தொழில் உரிமம் மற்றும் தொழில் வரி இல்லாமல் நடத்தப்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்