பாம்புடன் போஸ் கொடுத்து வீம்பாய் மாட்டிய TTF வாசன்! - வீட்டை சோதனையிட்ட வனத்துறை அதிகாரிகள்!

Prasanth Karthick
வியாழன், 2 ஜனவரி 2025 (11:38 IST)

பிரபல யூட்யூபரான டிடிஎஃப் வாசன் மலைப்பாம்புடன் எடுத்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் வேறு வன விலங்குகளை வளர்க்கிறாரா என வனத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

 

 

தமிழில் பிரபல யூட்யூபராக இருக்கும் டிடிஎஃப் வாசன், பைக் ரைடிங் சாகசங்களை செய்து பலரை தனக்கு ரசிகர்களாக கொண்டுள்ளார். ஆனால் பொதுவெளியில் இவர் செய்யும் பைக் சாகசங்கள் ஆபத்தை ஏற்படுத்துவதாக அமைந்து வந்த நிலையில் இவரது ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

 

ஆனாலும் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் வீடியோக்களை வெளியிட்டு பிரச்சினையில் சிக்கி வருகிறார் டிடிஎஃப் வாசன். சமீபத்தில் கையில் மலைப்பாம்பு ஒன்றை வைத்தபடி அவர் வெளியிட்ட வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் மலைப்பாம்புக்கு கூண்டு வாங்கியதாக அவர் குறிப்பிட்ட கடையை ஆய்வு செய்த வனத்துறை அதிகாரிகள், வளர்ப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ள கிளி உள்ளிட்ட பறவைகளை பறிமுதல் செய்துள்ளனர்.
 

ALSO READ: சோகத்தில் தள்ளிய ‘விடாமுயற்சி’.. கை கொடுக்க வரும் ‘குட் பேட் அக்லி’! - மகிழ்ச்சியில் அஜித் ரசிகர்கள்!

 

டிடிஎஃப் வாசன் முறையான அனுமதி பெற்றே மலைப்பாம்பை வளர்த்து வந்தாலும், அதை துன்புறுத்தும் விதமாக வீடியோ வெளியிட்டது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் டிடிஎஃப் வாசன் வேறு ஏதேனும் வன விலங்குகளை வளர்க்கிறாரா என அவரது வெள்ளியங்காடு வீட்டில் வனத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். ஆனால் வேறு எந்த வன விலங்குகளும் அந்த வீட்டில் வளர்க்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்