பிரபல நகைக்கடைகளில் கேரள கடத்தல் தங்கம்!? -மஃப்டியில் போய் கலங்கடித்த அதிகாரிகள்!

Webdunia
புதன், 16 செப்டம்பர் 2020 (09:18 IST)
கேரளாவில் கடத்தப்பட்ட தங்கம் திருச்சியில் உள்ள பிரபல நகைக்கடைகளில் விற்கப்படுவதாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் திருவனந்தபுர விமான நிலையத்தில் 15 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கடத்தல் விவகாரத்தில் கேரள அரசியல் பிரமுகர்கள் பலரது பெயரும் அடிபடும் நிலையில் சுவப்னா சுரேஷ் என்பவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் சுவப்னா சுரேஷுக்கு திருச்சியில் உள்ள பிரபல நகைக்கடைகளோடு தொடர்புள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி திருச்சி என்.எஸ்.பி சாலை மற்றும் சின்னக்கடை வீதியில் உள்ள பிரபல நகைக்கடைகளுக்குள் மக்களோடு மக்களாக நுழைந்த சுங்கத்துறை அதிகாரிகள் திடீரென அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

வாங்கப்பட்ட தங்கத்தின் அளவு மற்றும் விற்பனை குறித்த ஆவணங்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் மேற்கொண்டு நடவடிக்கைகள் நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்