போக்குவரத்து ஊழியர்களின் அதிரடி முடிவால் அதிர்ச்சி அடைந்த அரசு

Webdunia
செவ்வாய், 9 ஜனவரி 2018 (02:14 IST)
கடந்த ஐந்து நாட்களாக வேலைநிறுத்தம் செய்து வரும் போக்குவரத்து ஊழியர்கள் நாளைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, புதிய ஆட்கள் நியமனம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றமும் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை கண்டித்துள்ளது.

இந்த நிலையில் நீதிமன்றம் உத்தரவிட்டும் வேலைநிறுத்தத்தை தொடர்ந்து வரும் போக்குவரத்து தொழிலாளர்கள் தற்போது நூதன முறையில் அரசுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். அதாவது எங்கள் கோரிக்கை வரும் வரை போராட்டம் தொடரும். ஆனால் எங்களை கட்டாயப்படுத்தி பணிக்கு வரவழைத்தால் பயணிகளிடம் டிக்கெட்டுக்களுக்கு காசு வாங்காமல் இலவசமாக பயணம் செய்ய அனுமதிப்போம் என்று கூறியுள்ளனர்.

போக்குவரத்து ஊழியர்களின் இந்த அறிவிப்பால் அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. வெளிநாட்டில் இதே போன்ற ஒரு போராட்டம் நடந்தபோது அந்நாட்டு அரசு போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோன்ற நிலைமை தமிழகத்திலும் ஏற்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்