போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் : நிலுவைத் தொகை உடனே வழங்க வேண்டும் - நீதிமன்றம் அதிரடி

திங்கள், 8 ஜனவரி 2018 (11:20 IST)
தமிழக போக்குவரத்து ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட நிலுவைத் தொகையை அரசு உடனே வழங்க வேண்டும் என சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 
ஊதிய உயர்வு, நிலுவைத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக போக்குவரத்து துறை ஊழியர்கள் கடந்த 5 நாட்களாக பணிக்கு செல்லாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
 
போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும். இல்லையேல் நடவடிக்கை பாயும் என நீதிமன்றம் மற்றும் அமைச்சர் விஜய பாஸ்கர் ஆகியோர் எச்சரித்தும் 5 நாளாக இன்று போராட்டம் தொடர்கிறது.

 
இந்நிலையில், இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று காலை சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடங்கியது. அப்போது, தமிழக அரசுக்கும், போக்குவரத்து தொழிலாளர் சங்கங்களுக்கும் பல வேள்விகளை எழுப்பிய நீதிமன்றம், போக்குவரத்து ஊழியர்களிடம் பிடித்தம் செய்த நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டது.
 
அதோடு, ஓய்வூதியம், பணிக்கொடையை ஆகியவற்றை வழங்காதது ஏன்? ஏன் காலதாமதம்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்