போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு திரும்பாவிட்டல்...... அமைச்சர் எச்சரிக்கை

திங்கள், 8 ஜனவரி 2018 (19:40 IST)
வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் புதிய ஆட்களை நியமிப்போம் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

 
தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி தொடர்ந்து 5வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர், நிதித் துறை செயலாளர் சண்முகம் மற்றும் போக்குவரத்து அதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.
 
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜய பாஸ்கர் கூறியதாவது:-
 
ஊதிய உயர்வு தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் 23 முறை பேச்சுவார்த்தை நடத்தி விட்டோம். தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை தவறான முறையில் வழி நடத்துகிறது. 15 ஆண்டுகால பிரச்சனைக்கு ஒரே நாளில் தீர்வு கான நிர்பந்திக்கிறார்கள். ரூ.5000 கோடியை திரும்ப தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 
 
மக்கள் பாதிக்க கூடாது என்பதற்காக வெளியாட்களை வைத்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தற்காலிக ஓட்டுநர்களிடம் உரிய ஓட்டுநர் உரிமம் உள்ளது. பொங்கலுக்குள் அவர்களுக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகையை தர முயற்சிக்கிறோம். எனவே பணிக்கு திரும்பாவிட்டால் புதிய ஆட்களை நியமனம் செய்வோம் என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்