தொண்டையில் மாட்டின் கொம்பு குத்தி வாலிபர் பரிதாப பலி.. குமாரபாளையம் ஜல்லிக்கட்டில் சோகம்..!

Siva
ஞாயிறு, 2 பிப்ரவரி 2025 (13:26 IST)
குமாரபாளையம் ஜல்லிக்கட்டு நேற்று நடந்த நிலையில் அதில் தொண்டையில் மாட்டின் கொம்பு குத்தி வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு அலங்காநல்லூர், பாலமேடு உள்பட பல ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடந்த நிலையில் குமாரபாளையம் ஜல்லிக்கட்டு நேற்று ஒன்பதாவது ஆண்டாக சிறப்பாக நடந்தது./ உதவி கலெக்டர் சுகந்தி தலைமையில் நடந்த இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 540 காளைகள் கலந்து கொண்டதாகவும் 400 நாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டதாகவும் தெரிகிறது.
 
 இந்த நிலையில் வாடிவாசல் வழியாக கோவில் காளை அவிழ்த்து விடப்பட்ட பின்னர் ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்ட நிலையில் மாடு பிடி வீரர்கள் அடங்காத காளைகளை அடக்கினர். இந்த நிலையில் சேலம் மாவட்டம் தலைவாசல் என்ற பகுதியை சேர்ந்த தாமஸ் ஆல்வா எடிசன் என்பவர் மாடுபிடி வீரராக களமிறங்கிய நிலையில் அவர் ஆக்ரோசமாக வந்த முரட்டுக்காளையை அடக்க முயன்றார். 
 
அப்போது அவருடைய தொண்டை பகுதியில் மாட்ட்டின் கொம்பு குத்தி ரத்தப்போக்கு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. இதனை அடுத்து ஜல்லிக்கட்டு குழுவினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்