உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று நடைபெற இருக்கிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ஏராளமான பரிசுகள் காத்திருக்கின்றன. டிராக்டர், கார், பைக், மற்றும் ஆட்டோக்கள் உள்ளிட்ட பரிசுகள் வென்றவர்களுக்கு வழங்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஜல்லிக்கட்டில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்ட மாடுபிடி வீரர்களுக்கு, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் காலை உணவு அளிக்கப்பட்டது. மேலும், இந்த ஜல்லிக்கட்டு போட்டியை தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைப்பதற்காக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அவருடைய மகன் இன்பநிதி உடன் நேற்று மதுரை சென்றுள்ளார். இன்று, ஜல்லிக்கட்டு தொடங்கி வைத்தவுடன் காளைகள் சீறி பாய தயாராக உள்ளன.
இந்த நிகழ்ச்சியை காண்பதற்கு லட்சக்கணக்கான மக்கள் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலிருந்து மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva