சென்னையில் 2 ஆயிரம் இடங்களில் நாளை கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்கள்

Webdunia
சனி, 17 செப்டம்பர் 2022 (14:55 IST)
சென்னையில் நாளை 2000 இடத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 
 
சென்னை மாநகராட்சியில் நாளை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்படும் என்றும் ஒரு வார்டுக்கு 10 முகாம்கள் என 200 வார்டுகளில் 2000 முகாம் நடத்தப்படும் என்றும் சென்னை மாநகராட்சி செய்து வைத்துள்ளது
 
18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செய்து கொள்ளலாம் என்றும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் உடனடியாக செலுத்தி கொள்ளலாம் என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது தமிழகத்தில் குறைந்து வரும் நிலையில் கொரோனா இல்லாத தமிழகம் உருவாக வேண்டும் என்பதே அரசின் எண்ணம் என்றும் அதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்