தக்காளி விலை இன்றும் உயர்வு.. ஒரு கிலோ இவ்வளவா? பொதுமக்கள் அதிர்ச்சி..!

Webdunia
புதன், 12 ஜூலை 2023 (07:33 IST)
தக்காளி விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வருகிறது என்பதும் கோயம்பேடு மார்க்கெட்டில் 100 ரூபாய்க்கு மேல் விற்பனையாகும் தக்காளி சில்லறை கடைகளில் 130 முதல் 150 வரை விற்பனையாகி வருகிறது. பிற மாநிலங்களில் 200க்கும் மேல் ஒரு கிலோ தக்காளி விற்பனையாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
இந்த நிலையில் தக்காளி விலையை கட்டுப்படுத்தும் வகையில் ரேஷன் கடைகளில் தமிழக அரசு தக்காளி விற்பனை செய்து வருகிறது என்பதும் அதன் விலை 60 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அதேபோல் தமிழகம் முழுவதும் தக்காளியை அரசை விற்க ஏற்பாடு செய்து வருகிறது என்பதும் 300 கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் நேற்று 10 ரூபாய் தக்காளி விலை குறைந்த நிலையில் இன்று அதே 10 ரூபாய் மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று தக்காளியின் விலை ஒரு கிலோ 110 ரூபாய்க்கு விற்பனை ஆகி வருவதாகவும் சில்லறை கடைகளில் 130 முதல் 140 வரை விற்பனையாகி வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
தக்காளி விலை இப்போதைக்கு குறையாது என்பதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்