இன்று தக்காளி விலை எவ்வளவு தெரியுமா? அதிர்ச்சி மேல் அதிர்ச்சி..!

Webdunia
ஞாயிறு, 16 ஜூலை 2023 (08:37 IST)
தக்காளி விலை கடந்த சில நாட்களாக அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையில் இன்று சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை 130 என விற்பனையாகி வருவதாகவும் சில்லரை விலையில் ரூ.150 என விற்பனையாகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. 
 
நேற்றும் இதே விலையில் விற்பனையான நிலையில் இன்று விலை மாற்றம் இன்றி தக்காளி நேற்றைய விலையில் விற்பனையாகி வருவதாக தக்காளி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
தக்காளி வரத்து இன்னும் சீரடையவில்லை என்றும் தக்காளி வரத்து அதிகரித்தால் மட்டுமே விலை குறைய வாய்ப்பிருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை 150 ரூபாய் விற்பனையாகி வருவதை அடுத்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தக்காளி விலையை குறைக்க மத்திய மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை விடப்பட்டு வருகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்