தொடர்ந்து 5வது நாளாக தங்கம் விலை உயர்வு.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

சனி, 15 ஜூலை 2023 (10:08 IST)
தங்கம் விலை சென்னையில் கடந்த ஜூலை 11ஆம் தேதி உயரத் தொடங்கிய நிலையில் தொடர்ச்சியாக ஐந்தாவது நாளாக இன்றும் தங்கம் விலை உயர்ந்திருப்பது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னையில் ஆபரண தங்கம் விலை நேற்றைவிட ஒரு கிராமுக்கு ஐந்து ரூபாய் உயர்ந்து ரூ.5550 என விற்பனையாகி வருகிறது. அதேபோல் ஒரு சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து 44,400 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. 
 
24 கேரட் சுத்த தங்கம் ஒரு கிராம் 6017 என்றும் ஒரு சவரன் 48,136 என்று விற்பனையாகி வருகிறது. தங்கம் விலை போலவே வெள்ளியும் நிலையம் என்று உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 50 காசும் ஒரு கிலோவுக்கு 500 ரூபாயும் உயர்ந்துள்ளது என்பதும் சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை 81 ஆயிரத்து 800 என விற்பனை ஆகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்