மீண்டும் ரூ.20 அதிகரித்த தக்காளி விலை.. ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா?

சனி, 15 ஜூலை 2023 (09:16 IST)
சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று தக்காளியின் விலை மேலும் 20 ரூபாய் அதிகரித்துள்ளதாக கூறப்படுவதை அடுத்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
கடந்த சில நாட்களாக தக்காளி விலை விண்ணை தொட்டு வருகிறது என்பதும் மொத்த விலையில் ரூபாய் 130 என்று சில்லறை விலையில் 150 ரூபாய் என்று விற்பனை ஆகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இன்று தக்காளி வரத்து குறைந்துள்ளதை அடுத்து ஒரு கிலோ 20 ரூபாய் அதிகரித்துள்ளதாகவும் இதனை அடுத்து இன்று மொத்த விலையில் ரூபாய் 140 என விற்பனை ஆகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. 
 
இதனை அடுத்து சில்லறை கடைகளில் ஒரு கிலோ 160 வரை விற்பனையாகி வருவதாக கூறப்படுகிறது. இதே ரீதியில் சென்றால் தக்காளி விலை இன்னும் ஒரு சில நாட்களில் 200 ரூபாயை தொட்டுவிடும் என்று கூறப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
தமிழக அரசு 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்தாலும் அது அனைவருக்கும் கிடைப்பதில்லை என்றும் எனவே சந்தையில் தக்காளி விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்