100 ரூபாயை தாண்டிய தக்காளி விலை.. இன்னும் உயரும் என தகவல்..!

Siva
திங்கள், 7 அக்டோபர் 2024 (11:51 IST)
தக்காளி விலை 100 ரூபாயை தாண்டியுள்ள நிலையில் இன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து வரும் தக்காளி வரவு குறைந்து இருப்பதை அடுத்து, கடந்த மாதம் 40 ரூபாயாக இருந்த தக்காளி, தற்போது ஒரு கிலோ 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

தக்காளி விலை அதிகரிப்பால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில், தக்காளி விலை இன்னும் அதிகரிக்கும் என்றும் 200 ரூபாய் வரை செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

வட மாநிலங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருவதால் அங்கு தக்காளி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாகவும், ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் தற்போது தக்காளி கொள்முதல் செய்யப்படும் போதிலும், போதிய வரத்து இல்லை என்றும் கூறப்படுகிறது. அதனால், உற்பத்தி நடக்கும் இடத்திலேயே விலை அதிகரித்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமும் 50 லோடுகள் மட்டுமே தக்காளி கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வருவதால், இன்னும் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்