சென்னையில் கிடுகிடுவென உயர்ந்த தக்காளி விலை! – மக்கள் அதிர்ச்சி!

Webdunia
சனி, 3 செப்டம்பர் 2022 (09:50 IST)
கனமழை காரணமாக சென்னைக்கு தக்காளி வரத்து குறைந்துள்ள நிலையில் விலை வேகமாக அதிகரித்துள்ளது.

கடந்த சில காலமாக ஆந்திரா, கர்நாடகா பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் சென்னைக்குக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை வேகமாக உயர்ந்துள்ளது.

சில நாட்கள் முன்பு வரை ஒரு கிலோ தக்காளி ரூ.24 முதல் ரூ.28 வரை விற்று வந்த நிலையில் தற்போது கிலோ ரூ.35 முதல் ரூ.40 வரை உயர்ந்துள்ளது. இது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வரும் வாரங்களில் தக்காளி வரத்து அதிகரித்தால் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்