குரங்கு காய்ச்சலை அடுத்து தக்காளி காய்ச்சல்: கண்காணிப்பை தீவிரப்படுத்த அமைச்சர் அறிவுறுத்தல்!

ஞாயிறு, 21 ஆகஸ்ட் 2022 (10:51 IST)
குரங்கு காய்ச்சலை அடுத்து தக்காளி காய்ச்சல்: கண்காணிப்பை தீவிரப்படுத்த அமைச்சர் அறிவுறுத்தல்!
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் குரங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் தற்போது தக்காளி காய்ச்சல் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இந்தியாவில் இதுவரை 52 பேருக்கு தக்காளி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பாக கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் என்ற பகுதியில் 5 வயது குழந்தை ஒருவருக்கு தக்காளி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
இந்த நிலையில் இது குறித்து தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியபோது தக்காளி காய்ச்சலை கட்டுப்படுத்த கேரள எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த பட்டுள்ளதாக அவர் கூறினார் 
 
மேலும் தமிழகத்தில்  18 வயதைக் கடந்தவர்கள் சுமார் ஒரு லட்சத்து 97 சதவீதம் பேர் முதல் தவணை செலுத்தி உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
தமிழகத்தில் இதுவரை தக்காளி காய்ச்சல் பரவ வில்லை என்றாலும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் உறுதிப்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்