தக்காளி வரத்து குறைவு.. எகிறியது விலை! – அதிர்ச்சியில் மக்கள்!

Webdunia
திங்கள், 26 ஜூன் 2023 (09:14 IST)
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் தக்காளி வரத்து அளவு குறைந்துள்ளதால் விலை வேகமாக அதிகரித்து வருவது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.



மழை காலம் வந்தாலே தமிழ்நாட்டிற்கு தக்காளி வரத்து குறைவதும் விலை உயர்வதும் வாடிக்கையாக உள்ளது. ஆனால் இந்த முறை மழை காலத்திற்கு முன்பே தக்காளில் விலை ரூ.100ஐ தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 1000 டன்னிற்கு மேல் தக்காளில் தேவை உள்ளது. ஆனால் சேமிப்பு அறைகள் இல்லாததால் வியாபாரிகள் குறைந்த அளவு தக்காளியே கொள்முதல் செய்து வருவதால் விலை எகிற தொடங்கியுள்ளது.

கடந்த வாரங்களில் ரூ.40க்கு விற்று வந்த தக்காளில் தற்போது வேகமாக விலை உயர்ந்து ரூ.70 முதல் ரூ100 என்ற அளவை எட்டியுள்ளது. சென்னை புறநகர் பகுதிகளில் தக்காளி ரூ.100க்கும் அதிகமாக விற்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இஞ்சி, பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளும் ரூ.100க்கும் அதிகமாக விலை உயர்ந்துள்ளது. இதனால் சாமானிய மக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்