அவரது பேச்சு சர்ச்சைக்குரிய வகையாக இருப்பதாக அவருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கில் உதயநிதி ஸ்டாலின் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இன்று இந்த வழக்கு விசாரணை நடந்த நிலையில் பெங்களூரில் உள்ள மக்கள் பிரதிநிதித்துவ நீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜரானார்.
இதனை அடுத்து அவரது ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். மேலும் உச்சநீதிமன்றத்தில் இதே வழக்கு நிலுவையில் இருப்பதால் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் கோரிக்கை விடுத்த நிலையில் இந்த வழக்கு ஆகஸ்ட் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்